வேலூர் : தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் வேகமாக பரவி வருகிறது. இதனால் தினந்தேறும் இரவு 10 மணியில் இருந்து அதிகாலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை நேற்றிரவு முதல் அமலுக்கு வந்தது. அதேபோல் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, வேலூர் மாவட்டத்தில் 30 முக்கிய இடங்களில் போலீசார் சோதனை சாவடி அமைத்து வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், நேற்றிரவு 9 மணிக்கு மாவட்டத்தில் இருந்த பெரும்பாலான கடைகள் மூடப்பட்டது. இரவு 10 மணிக்கு மேல் பஸ் போக்குவரத்து இல்லாததால், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு செல்ல இருந்த பயணிகள் பழைய பஸ் நிலையத்தில் இரவு உணவை சாப்பிட்டு, அங்கேயே படுத்து உறங்கினார். அதிகாலை பஸ் பிடித்து சொந்த ஊருக்கு சென்றனர். இரவு ஊரடங்கு காரணமாக நேற்றிரவு 10 மணியளவில் முக்கிய சாலையில் வாகன போக்குவரத்து இன்றி வெறிச்சோடியது. வேலூர் பழைய பஸ் நிலையத்தில் டிஎஸ்பி மகேஷ் தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த பைக், கார்களில் வந்தவர்களிடம் இரவு நேரத்தில் பயணம் செய்யக்கூடாது என அறிவுரை வழங்கினர். இரவு நேர ஊரடங்கின் முதல் நாளான நேற்று கெடுபிடிக்கு இடையே ஆட்டோ, பைக், வாகனங்கள் ஓடியது குறிப்பிடத்தக்கது. …
The post இரவு 10 மணிக்கே போக்குவரத்து முடங்கியது இரவு நேர ஊரடங்கால் வெறிச்சோடிய வேலூர் appeared first on Dinakaran.