பட்டதாரிகளுக்கு வேலை வழங்க அரசிடம் என்னகொள்கை உள்ளது?தமிழக காங்கிரஸ் கேள்வி

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்ட அறிக்கை:     தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சிக்கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கிற தொழில் திட்டங்களை  எதிர்ப்பதை எவரும் தவறு என்று சொல்ல முடியாது. ஆனால், எந்தத் தொழில் மக்களை பாதிக்காது என்பதை தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும். காவிரி டெல்டாவைப் பொறுத்தவரை விவசாயத்தை மட்டுமே சார்ந்திருக்க முடியாது.  விவசாயத்தோடு சம்பந்தப்பட்ட தொழில்களை ஊக்கப்படுத்தி, காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள 25 லட்சம் விவசாய தொழிலாளர்களை காப்பாற்றுவதற்கு தமிழக அரசு என்ன திட்டம் வைத்திருக்கிறது?

காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்த அதேநேரத்தில், ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பொறியியல் பட்டதாரிகள் படித்து விட்டு, வேலைவாய்ப்புக் கோரி நிற்கிறார்கள். அத்தகைய இளைஞர்களுக்கு  வேலைவாய்ப்பு வழங்குவதற்கு தமிழக அரசு எத்தகைய தொழிற் கொள்கையை கொண்டிருக்கிறது என்பதை உடனடியாக அறிவிக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள தொழில் முனைவோர், வல்லுநர்கள் ஆகியோரை அழைத்து ஆரோக்கியமான  தொழில் வளர்ச்சிக்கான சூழலை உருவாக்க தொழிற்கொள்கையை அறிவிக்க உடனடி நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.

Related Stories: