ஜூனியர் உலகக்கோப்பை இறுதிப்போட்டி: இந்தியாவை வீழ்த்தி முதல் முதலில் U19 உலகக்கோப்பையை முத்தமிட்டது வங்கதேச அணி

டர்பன்: ஐசிசி சார்பில் 19 வயதுக்குட்பட்ட அணிகளுக்கான உலக கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 17ம் தேதி முதல் தென் ஆப்ரிக்காவில் நடைபெற்று வந்தது. இத்தொடரில் இந்தியா, பாகிஸ்தான் உட்பட மொத்தம் 16 அணிகள் 4  பிரிவுகளாக லீக் சுற்றில் மோதின. ஏ பிரிவில் இடம் பெற்றிருந்த இந்திய அணி நியூசிலாந்து,  இலங்கை, ஜப்பான் அணிகளை வீழ்த்தி 6 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தது. சூப்பர் லீக் கால் இறுதியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்ட இந்தியா  74 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்று அரை இறுதிக்கு முன்னேறியது. பரபரப்பான அரை இறுதியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில், 10 விக்கெட் வித்தாயசத்தில் அபாரமாக வென்ற இந்திய அணி தொடர்ந்து 3வது  முறையாக பைனலுக்கு முன்னேறியது. 2வது அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து-வங்கதேசம் அணிகள் மோதின. இதில், வங்கதேசம் அணி வெற்றி பெற்று பைனலுக்கு முன்னேறியது.

இந்நிலையில், உலகக்கோப்பை யாருக்கு என்பதை தீர்மானிக்கும் இறுதிப்போட்டி இன்று போர்ச் செப்ஸ்ட் ரூமில் இந்திய நேரப்படி பிற்பகல் 1 மணிக்கு தொடங்கியது. இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பந்து வீச்சை தேர்வு  செய்தது. இதனையடுத்து, 4 முறை உலகக்கோப்பை வென்றுள்ள இந்திய அணி 5 முறை U19  உலகக்கோப்பை முத்தமிட ஆவளாக இறங்கியது. இந்திய அணி சார்பில் தொடக்க வீரர்களாக திவ்யான்ஷ் சக்சேனா மற்றும் ஜெய்ஸ்வால்  களமிறங்கினர். ஆனால், 17 பந்துகளில் 2 ரன்கள் எடுத்த நிலையில் திவ்யான்ஷ் சக்சேனா ஆட்டமிழந்தார். தொடர்ந்து, ஜெய்ஸ்வாலுடன் திலக் வர்மா கை கோர்த்து நிதானமாக ரன் சேர்த்தனர். பொறுப்பாக ஆடிய ஜெய்ஸ்வால்  அரைசதமடித்தார். திலக் வர்மா 38 ரன்னில் ஆட்டமிழக்க அடுத்து வந்த கேப்டன் பிரியம் கார்க் 7 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து, ஜெய்ஸ்வால், 121 பந்துகளில் 88 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

அடுத்தடுத்து வந்த வீரர்களும் தொடர்ந்து ஆட்டமிழக்க இந்திய அணி 47.2 ஓவரில் அனைத்து விக்கெட்கயைும் இழந்து 177 ரன்களை எடுத்தது. வங்கதேசம் சார்பில் அவிஷேக் தாஸ் 3 விக்கெட்களும்,  இஸ்லாம் மற்றும் ஹசன் சாகிப் தலா 2  விக்கெட்களும், ஹசன் 1 விக்கெட்டையும் கைப்பற்றினர். தொடர்ந்து, U19  உலகக்கோப்பை கைப்பற்ற வேண்டும் எண்ணத்தில் வங்கதேச அணி களமிறங்கியது. வங்கதேச அணி சார்பில் தொடக்கவீரர்களாக பர்வேஸ் ஹொசைன் எமோன் மற்றும் டைசித் ஹசன் இறங்கினர். ஆனால், டைசித் ஹசன்  25 பந்துகளில் 17 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து இறங்கிய ஹசன் ஜாய், 12 பந்துகளில் 8 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து இறங்கிய தவ்ஹித் ஹார்ட்  ரன் எதுவும் எடுக்காமலும், ஷாஹாதத்  ஹொசைன் 1 ரன் ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். தொடர்ந்து இறங்கிய அணியில் கேப்டன் அக்பர் அலி நிதானமாக ஆடிவந்தார்.

ஆனால், அடுத்து இறங்கிய ஷமிம் ஹொசைன் 7 ரன்கள் எடுத்தும், அவிஷேக் தாஸ் 5 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். ஆனால், எதிர்பாராத விதமாக மழை வந்த காரணத்தினால் போட்டி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மழை  நின்றப்பின் தொடங்கிய போட்டியில், டி.ஆர்.எஸ் முறைப்படி வங்கதேச அணி முன்னிலை வகித்தது. இதனால், வங்கதேச அணிக்கு 7 ரன்கள் வெற்றிக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. தொடர்ந்து 42.1 ஓவர்களில் 3 விக்கெட் வித்தியாசத்தில் U19   உலகக்கோப்பை வங்கதேச அணி முதல் முதலில் முத்தமிட்டது.

Related Stories: