வெப்பத்தில் இருந்து விடுதலை: அடுத்த 2 நாட்களுக்கு சென்னையில் மழைக்கு வாய்ப்பு....வானிலை ஆய்வு மையம்

சென்னை: நீண்ட காலமாக நீடித்து வந்த வெப்பத்தில் இருந்து நிவாரணம் கிடைக்கும் விதமாக அடுத்த 2 நாட்களுக்கு சென்னையில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தென் தமிழகம் முதல், மகாராஷ்டிர மாநிலம் மராத்வாடா பகுதி வரை, கர்நாடகத்தின் உள் பகுதி வழியாக காற்று சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 3 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. பிப்ரவரி முதல் வாரத்தில் நீடித்து வந்த வெப்பமான நாட்கள் மற்றும் சூடான இரவுகளால் மக்கள் அவதிப்பட்டு வந்தனர்.

தற்போது வங்கக் கடலில் இருந்து வரக்கூடிய கிழக்குக் ஆற்றில் ஏற்பட்டுள்ள சுழற்சியின் காரணமாக தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சனிக்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான வெப்பநிலை அளவுகளின்படி, பகல்நேர வெப்பநிலையில் அதிக அளவாக மதுரை தெற்கில் 35 டிகிரி, நாமக்கல், கரூர் பரமத்தி,மதுரை விமான நிலையம், பாளையங்கோட்டை ஆகிய இடங்களில் தலா 34 டிகிரி செல்சியஸ் வெயில் பதிவாகியுள்ளது.

அதிக பகல் வெப்பநிலை சங்கமம் மற்றும் குவிப்பு மண்டலம் தெற்கு நோக்கி நகர்ந்து வருவதால் ஒடிசா, ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. ஜனவரி கடைசி வாரத்தில் இருந்து, நகரம் சூடான பகல்கள் மற்றும் வெப்பமான இரவுகளை அனுபவித்து வருகிறது. சனிக்கிழமையன்று, சென்னை நுங்கம்பாக்கத்தில் 31.8°C-யும், மீனம்பாக்கத்தில் 32.2°C-யும் பதிவானது. இரவு நேரங்களிலும் வெப்பநிலை 24°C-யை ஒட்டியுள்ளது. இது வழக்கத்தை விட வெப்பமானது. தெற்கு புறநகர்ப் பகுதிகளில் இரவுகள் குளிராக இருக்கின்றன. சனிக்கிழமையன்று மீனம்பாக்கம் குறைந்தபட்ச வெப்பநிலை 22°C ஆகவும், நுங்கம்பாக்கம் குறைந்தபட்ச வெப்பநிலை 23.4°C ஆகவும் பதிவாகியுள்ளது.

Related Stories: