காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தார் முதல்வர் பழனிசாமி

சேலம்: காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.  சேலம் தலைவாசலில் ரூ.396 கோடி ரூபாய் மதிப்பில் அமையும் நவீன கால்நடை பூங்காவிற்கு முதல் அமைச்சர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார். பின்னர் பேசிய அவர்; காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தார். தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

டெல்டா மாவட்ட விவசாயிகளின் துயரத்தை புரிந்து கொண்டு இதை அறிவிக்கிறேன். டெல்டா பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அதிமுக அரசு அனுமதி தராது. விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் எந்த திட்டத்திற்கும் தமிழகத்தில் அனுமதி கிடையாது. காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக்கும் நடவடிக்கைக்கு சிறப்பு சட்டம் இயற்றப்படும். சட்ட நிபுணர்களை கலந்து ஆலோசித்து காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்க தனிச்சட்டம் இயற்றப்படும் எனவும் கூறியுள்ளார்.

இதனிடையே சட்டப்பேரவையில் உடனடியாக சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. நடைபெறவிருக்கிற பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே சட்டத்தை கொண்டு வர வலியுறுத்தியுள்ளது.

Related Stories: