டெல்லி சட்டப்பேரவை வாக்குப்பதிவு நிறைவு: தேர்தல் பிந்தைய கருத்து கணிப்பு வெளியீடு...ஆளும் ஆம்ஆத்மி கட்சி பெரும்பாலான இடங்களை கைப்பற்றும்

டெல்லி: டெல்லியில் 70 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. டெல்லி சட்டசபையின் பதவிக்காலம் வரும் 22ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனால் 70 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக பிப்ரவரி 8ம்  தேதி தேர்தல் நடத்தப்படும் என்றும் 11ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படும் என கடந்த மாதம் 6ம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி தனித்து நின்று  அனைத்து  தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. பாஜக 67 தொகுதிகளிலும், அதன் கூட்டணி கட்சிகள் 3 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. காங்கிரஸ் 66 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அதன் கூட்டணி கட்சியான லாலுவின் ராஷ்ட்ரிய  ஜனதா தளம்  கட்சி 4 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது.

மாநிலத்தில் ஆளும் ஆம் ஆத்மி, பாஜக மற்றும் காங்கிரஸ் தனித்தனியாக போட்டியிடுகிறது. மும்முனைப் போட்டியில் ஆட்சியை தக்கவைக்க ஆம் ஆத்மியும், ஆட்சியை பிடிக்க பாஜவும் கடுமையாக போராடி வருகின்றன. டெல்லி  சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கிய மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. வாக்குப்பதிவு தொடங்கிய முதல் வாக்குச்சாவடிகளில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். மாலை 6  மணி நிலவரப்படி 54.65 % வாக்குகள் பதிவாகியுள்ளன. தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 11-ம் தேதி எண்ணப்படுகிறது. அன்று மாலை டெல்லியில் எந்த கட்சி ஆட்சி அமைக்கும் என்பது தெரியவரும்.

இதற்கிடையே, தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு வெளியாகி வருகிறது. இதில் டெல்லியில் ஆளும் ஆம்ஆத்மி கட்சி பெரும்பாலான இடங்களை கைப்பற்றும் என்று தெரிவிக்கப்படுகிறது. 70 தொகுதி கொண்ட டெல்லி சட்டமன்றத்தில் 44

இடங்களை ஆம் ஆத்மி கட்சியும், 26 இடங்களை பாஜகவும், காங்கிரஸ் அதிகப்பட்சமாக 2 இடங்களில் வெற்றி பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Times now கருத்துக்கணிப்பு:

ஆம்ஆத்மி கட்சி 44 இடங்கள்

பாஜக கூட்டணி 26 இடங்கள்

காங்கிரஸ் கூட்டணி 0 இடங்கள்

இதரகட்சிகள் 0 இடங்கள்

Republic கருத்துக்கணிப்பு:

ஆம்ஆத்மி கட்சி 48-61 இடங்கள்

பாஜக 9-21 இடங்கள்

காங்கிரஸ் கூட்டணி 0-1 இடங்கள்

News X neta

ஆம்ஆத்மி கட்சி 53-57 இடங்கள்

பாஜக 11-17 இடங்கள்

காங்கிரஸ் கூட்டணி 0-2 இடங்கள்

Related Stories: