நிர்பயா குற்றவாளிகளின் தூக்குத் தண்டனைக்கான புதிய தேதியை அறிவிக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது பாட்டியாலா நீதிமன்றம்

டெல்லி: நிர்பயா கொலை வழக்கின் குற்றவாளிகளை தூக்கிலிடுவதற்கான புதிய தேதியை அறிவிக்கக் கோரி டெல்லி அரசு மற்றும் திகார் சிறை நிர்வாகம் தாக்கல் செய்த மனுக்களை டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. நிர்பயா கொலை குற்றவாளிகளை தூக்கிலிட உத்தரவிட முடியாது என்றும் பாட்டியாலா நீதிமன்றம் தெரிவித்துள்ளது. புதிய தேதியை அறிவிக்கக்கோரி திகார் சிறை நிர்வாகம், டெல்லி மாநில அரசு மனுக்களையும் டெல்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. நிர்பயா கொலை வழக்கின் குற்றவாளிகள் 4 பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் திகார் சிறை நிர்வாகம் செய்திருந்தது. ஆனால் குற்றவாளிகள் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு சட்ட வாய்ப்பை பயன்படுத்தி நீதிமன்றங்களில் மனுக்களைத் தாக்கல் செய்து வருகின்றனர்.

இதனால் நிர்பயா குற்றவாளிகளை தூக்கிலிடுவதற்கு 2 முறை ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில், டெல்லி அரசு மற்றும் திகார் சிறை நிர்வாகம் புதிய மனுக்களைத் தாக்கல் செய்திருந்தன. அதில், நிர்பயா கொலை குற்றவாளிகளை தூக்கிலிடுவதற்கான புதிய தேதியை அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது. ஆனால் இம்மனுக்களை டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. மேலும் எந்த ஒரு அனுமானத்தின் அடிப்படையிலும் குற்றவாளிகளை தூக்கிலிடுவதற்கான உத்தரவை பிறப்பிக்க இயலாது என்றும் டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

Related Stories: