சிஏஏவுக்கு எதிராக தமிழக பேரவையில் தீர்மானம் நிறைவேற்றபட வேண்டும்: இந்திய யூனியன் முஸ்லீம்லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன் வலியுறுத்தல்

சென்னை:  குடியுரிமை சட்டதிருத்தத்திற்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டுமென இந்திய யூனியன் முஸ்லீம்லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன் வலியுறுத்தியுளார்.  ஐ.யூ.எம்.எல் மாணவர் பேரவை சார்பில் குடியிருப்பு பாதுகாப்பு மாநாடு சென்னையில் நடைபெற்றது. அப்போது பேசிய தலைவர் காதர் மொய்தீன் மற்ற மாநிலங்களில் நிறைவேற்றபட்டதுபோல தமிழகத்திலும் குடியுரிமை சட்டதிருத்தத்திற்கு எதிரான தீர்மானத்தை தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படமேண்டுமென கூறினார்.

மேலும், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை மத்திய அரசு திரும்பபெறவேண்டுமெனவும் அவர் தெரிவித்தார். மேலும், அவர் பேசியதாவது, 72 ஆண்டு காலத்தில்  தமிழக வரலாற்றில் ஒருமதத்தை வேறுபடுத்தி,  மற்ற மதங்களுக்கு முன்னுரிமைகொடுத்து  எந்தஒரு சட்டமும் இதுவரை பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படவில்லை. ஏனெனில், தமிழக சட்டமன்றத்திலும் குடியுரிமை சட்டதிருத்தத்திற்கு எதிரான தீர்மானத்தை விரைவில் நிறைவேற்றப்படவேண்டுமென்று அனைவரின் தரப்பிலும் தேசிய தலைவர் காதர் மொய்தீன் வலியுறுத்தியுள்ளார்.

Related Stories: