நடிகர் விஜய்யை மிரட்டுவதற்காக வருமான வரித்துறை சோதனை நடக்கிறது: சீமான் பேட்டி

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சென்னை அடையார் கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று சந்தித்தார். இதுகுறித்து சீமான் நிருபர்களிடம் கூறியதாவது: முதல்வரை சந்தித்து தமிழர்கள் 7 பேர் விடுதலை குறித்து கோரிக்கை வைத்தோம். பிரதமரை சந்திக்கும்போது வலியுறுத்துவதாக முதல்வர் கூறினார். பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது: நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடைபெறுவது குறித்து உங்கள் கருத்து...? நடிகர் விஜய்யை விட அதிக சம்பளம் வாங்குவது யார் என்று எல்லோருக்கும் தெரியும். அவர் ஒரு படத்துக்கு ஜிஎஸ்டியோடு 126 கோடி வாங்குகிறார்.

அவர் வீட்டுக்கு வருமான வரித்துறையினர் ஏன் செல்லவில்லை? 66 லட்சம் அபராதம் கட்ட வேண்டும் என்று வருமான வரித்துறையே நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதை யாரும் பெரிதாக பேசுவது இல்லை. அவர் ஒரு அறிக்கை விட்டால் தலைப்பு செய்தியாக போடுகிறார்கள். விஜய் வீட்டில் வருமான வரித்துறை சோதனை என்பது, அவரை மிரட்டுவதற்கு, அச்சப்படுத்துவதற்காக நடத்தப்படுகிறது.   இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: