கொரோனா வைரஸ் பாதிப்பா? பல்வேறு மருத்துவமனையில் 11 பேர் தொடர் கண்காணிப்பு : சுகாதாரத்துறை செயலாளர் பேட்டி

சென்னை: பல்வேறு மருத்துவமனையில் 11 பேர் தொடர் கண்காணிப்பில் உள்ளனர் என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் கூறினார். கொரோனா வைரஸ் குறித்து கடந்த 18ம் தேதி முதல் ஐஎம்ஐயுடன் தொடர்பு கொண்டு கண்காணிக்கப்பட்டு வருகிறோம். இதையடுத்து பல்வேறு வகையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. மருத்துவர்களுக்கு பயிற்சிகளும் வழங்கி வருகிறோம். மேலும் இன்றைக்கு 200க்கும் மேற்பட்டவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு இந்த கொரோனா வைரஸ் குறித்து இதுவரை வந்த டபிள்யூஎச் அளித்த தகவல்கள், இந்திய சுகாதாரத்துறை, தமிழக சுகாதாரத்துறை சார்பில் என்னென்ன பண்ணிக் கொண்டு இருக்கிறோம், என்ன பண்ண வேண்டும் என்று கூறியுள்ளோம். இதுவரை 15 ஆயிரம் பயணிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளனர். 1351 பேர் தொடர் கண்காணிப்பில் உள்ளனர். அவர்களை தினம் இரண்டு தடவை தொடர்பு கொள்கிறோம்.

மேலும் கட்டுப்பாட்டு அறையில் இருந்து அவர்களை தொடர்ந்து கண்காணித்து கொண்டு இருக்கிறோம். பல்வேறு மருத்துவமனையில் 11 பேர் தொடர் கண்காணிப்பில் உள்ளனர். அவ்வப்போது அவர்களிடம் மாதிரிகள் எடுத்து அனுப்பப்பட்டு வருகிறது. மாதிரியின் ரிசல்ட் வரும் போது அறிவிக்கப்படும்.

இந்திய முறைப்படி கொரோனா வைரஸ் காய்ச்சலுக்கு மருந்து வைத்திருப்பவர்கள் அரசை அணுகலாம். இதுவரை 34 பேரின் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளது. அதில் 21 பேருக்கு பாதிப்பு இல்லை என்பது உறுதியாகியுள்ளது. மீதமுள்ளவர்களுக்கான முடிவுகளுக்காக காத்திருக்கிறோம். கேரளாவில் இருந்து தமிழகம் வரும் அனைத்து பயணிகள் மருத்துவ குழுக்கள் சோதனைக்கு உட்படுத்திதான் அனுப்பப்படுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: