ஐதராபாத்தில் கிருஷ்ணா நதி நீர் மேலாண்மை வாரிய கூட்டம் கண்டலேறுவில் தண்ணீர் இருந்தும் தர மறுப்பது ஏன்? தமிழக அதிகாரிகள் சரமாரி கேள்வி

சென்னை: ஐதராபாத்தில் கிருஷ்ணா நதி நீர் மேலாண்மை வாரியம் கூட்டம் நேற்று காலை நடந்தது. மத்திய நீர்வள ஆணைய அதிகாரியும், கிருஷ்ணா நதி நீர் மேலாண்ைம வாரிய தலைவருமான சந்திரசேகர் ஐயர் தலைமையில் நடந்தது.   இதில் தமிழக அரசு சார்பில் பொதுப்பணித்துறை நீர்வளப்பிரிவு முதன்மை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி, சென்னை மண்டல நீர்வளத்துறை தலைமை பொறியாளர் அசோகன், கண்காணிப்பு பொறியாளர் முத்தையா உள்ளிட்ட அதிகாரிகள்  கலந்து கொண்டனர். இதில், தெலுங்கு கங்கா திட்ட ஒப்பந்தப்படி முதல் தவணை காலத்தில் 4 டிஎம்சியும், இரண்டாவது தவணையில் 1.2 டிஎம்சியும் வழங்கப்பட்டுள்ளது. எனவே, கடந்த முதல் தவணை காலத்தில் பாக்கி வைத்துள்ள 4  டிஎம்சியும், இந்த இரண்டாவது தவணை காலத்தில் 3.8 டிஎம்சி நீரை தர வேண்டும். கண்டலேறு அணையில் 38 டிஎம்சி நீர் இருப்பு உள்ளதால், இந்தாண்டு பாக்கி வைக்காமல் தண்ணீர் தர நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், கிருஷ்ணா நதி  நீர் கால்வாய் புனரமைப்பு பணிக்கு தமிழக அரசு தர வேண்டிய ரூ.362 கோடியை பெற்று தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.

Related Stories: