கேரளா, பஞசாப் உள்ளிட் மாநிலங்களை தொடர்ந்து 5வது மாநிலமாக மத்தியப் பிரதேச சட்டசபையிலும் சி.ஏ.ஏ.வுக்கு எதிராக தீர்மானம்!

போபால்: கேரளா, பஞசாப் உள்ளிட் மாநிலங்களை தொடர்ந்து 5வது மாநிலமாக மத்தியப் பிரதேச சட்டசபையிலும் சி.ஏ.ஏ.வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மத்திய அரசின் சி.ஏ.ஏ.வுக்கு எதிராக கேரளா, பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் மேற்கு வங்க மாநில அரசுகள் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளன. இதேபாணியில் தங்களது மாநில சட்டசபையிலும் தீர்மானம் கொண்டுவருவோம் என தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் அறிவித்திருந்தார். மேலும் உச்சநீதிமன்றத்தில் சி.ஏ.ஏ.வுக்கு எதிராக கேரளா அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. பஞ்சாப் மாநில அரசும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப் போவதாக அறிவித்திருந்தது. தற்போது மத்திய பிரதேசத்தில் ஆளும் காங்கிரஸ் தலைமையிலான அரசும் சி.ஏ.ஏ.வுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளது.

மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத் தலைமையில் நடைபெற்ற அம்மாநில அமைச்சரவை கூட்டத்தில் சி.ஏ.ஏ., என்.பி.ஆர். குறித்து 2 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அந்த தீர்மானத்தில், சி.ஏ.ஏ.வை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். இச்சட்டம் இந்திய அரசியலமைப்பு சட்டங்களை மீறியதாகும். இச்சட்டம் நாடு முழுவதும் பல இடங்களில் போராட்டங்களை ஏற்படுத்தி உள்ளது. என்பிஆர் எனப்படும் தேசிய மக்கள்தொகை பதிவேட்டிலும் திருத்தம் கொண்டு வர வேண்டும் எனவும் இந்த தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த சட்டத்தால் ம..பி.யில் பரவலாக போராட்டம் வெடித்துள்ளது. இந்த போராட்டங்களால் அமைதி பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ம.பி.யில் ஆளும் காங்கிரஸ் சார்பில் சிஏஏ.வுக்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதே சமயம் எதிர்க்கட்சியான பா.ஜ.க சார்பில் சிஏஏவுக்கு ஆதரவாகவும் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories: