தமிழகத்தில் சிறைகளை கண்காணிக்க ட்ரோன்

கோவை: தமிழகத்தில் 9 முக்கிய சிறைகளை ஆளில்லாத குட்டி விமானம்  (ட்ரோன்) மூலமாக கண்காணிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 9 மத்திய சிறைகள் சிறைகளில் 22,350 கைதிகளை அடைத்து வைக்க இட வசதியுள்ளது. கண்காணிப்பு கேமரா வைத்தும் கைதிகளின் அட்டகாசம் அடங்க வில்லை.  இதை தவிர்க்க, ஆளில்லாத குட்டி விமானம் (ட்ரோன்) பயன்படுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 21.85 லட்ச ரூபாய் மதிப்பிலான இந்த ட்ரோன், கொள்முதல் செய்ய சிறைத்துறை நிர்வாகம் டெண்டர் வெளியிட்டுள்ளது. வரும் 14ம் தேதி ட்ரோன் கொள்முதல் டெண்டர் இறுதி செய்யப்படவுள்ளது.

இதுதொடர்பாக சிறைத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: தமிழக சிறைகளில் முதல் முறையாக ட்ரோன் பயன்பாட்டிற்கு வரவுள்ளது. 50 கி.மீ. வேகத்தில் ஆயிரம் மீட்டர் தூரம் சுற்றி வரும் வகையிலான ட்ரோன் வாங்கப்படும். இந்த ட்ரோனில் ஜி.பி.எஸ். வசதி இருக்கும். இது தவிர 20 மெகா பிக்சல் வசதியுடன் கூடிய கலர் கேமராவும் பொருத்தப்பட்டிருக்கும். 20 நிமிட நேரம் ட்ரோன் தொடர்ந்து பயன்படுத்த முடியும். 64 ஜி.பி அளவிற்கு சேமிப்பு வசதி இருக்கும்.  இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: