நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட்; மயங்க் அகர்வால், பிரித்வி ஷா, ஷுப்மன் கில் ஆகிய இளம் வீரர்களுக்கு வாய்ப்பு

மும்பை: நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. விராட்கோலி தலைமையிலான இந்திய அணியில் மயங்க் அகர்வால், பிரித்வி ஷா, ஷுப்மன் கில் உள்ளிட்ட இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி 5 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. முதலில் நடந்த டி20 தொடரில் அபாரமாக விளையாடிய இந்தியா 5-0 என்ற கணக்கில் ஒயிட்வாஷ் செய்து சாதனை படைத்தது. மவுன்ட் மவுங்கானுயி, பே ஓவல் மைதானத்தில் நேற்று முன்தினம் நடந்த 5வது போட்டியில், கோஹ்லிக்கு ஓய்வளிக்கப்பட்டு ரோகித் தலைமையில் இந்தியா களமிறங்கியது. 3வது வீரராக விளையாடிய ரோகித் அரை சதம் அடித்து அசத்தினார்.

அவர் 54 ரன் எடுத்திருந்தபோது காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டு வலியால் துடித்தார். களத்திலேயே அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து விளையாட முடியாத நிலை ஏற்பட்டதால் களத்தில் இருந்து வெளியேறினார் (ரிட்டயர்டு ஹர்ட்). காயத்தின் தன்மை தீவிரமாக உள்ளதால், நியூசி. டூரில் இருந்து ரோகித் விலகுவதாக நேற்று அறிவிக்கப்பட்டது. அவருக்கு பதிலாக மயாங்க் அகர்வால் ஒருநாள் தொடரில் சேர்க்கப்பட்டுள்ளார். நாளை ஹாமில்டனில் முலாவது ஒருநாள் போட்டி நடைபெற உள்ளது. ஒருநாள் தொடர் முடிந்ததும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது. இதற்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

டெஸ்ட் அணி வீரர்கள் விவரம்:

விராட்கோலி (கேப்டன்)

மயங்க் அகர்வால்

பிரித்வி ஷா

ஷுப்மன் கில்

புஜாரா

ரஹானே (துணை கேப்டன்)

ஹனுமா விஹாரி

சஹா (விக்கெட் கீப்பர்)

ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்)

அஸ்வின்

ஜடேஜா

பும்ரா

உமேஷ் யாதவ்

முகமது ஷமி

நவ்தீப் சைனி

இஷாந்த் சர்மா

Related Stories: