காளிகாம்பாள் கோயிலில் அறங்காவலர் குழு தேர்தல் 43 சிறப்பு பணியாளர் நியமனம்: அறநிலையத்துறை நடவடிக்கை

சென்னை: இந்து சமய அறநிலையத்துறை  இணை ஆணையர் ஹரிப்பிரியா சென்னை மாவட்ட உதவி ஆணையருக்கு கடிதம் ஒன்றை எழுதி அனுப்பியுள்ளார். அதில், காளிகாம்பாள் கோயிலின் அறங்காவலர் குழு தேர்தல் நடத்துவது குறித்து 1.4.2019 முதல் 31.12.2019 வரை காலத்திற்கான உறுப்பினர் சேர்க்கை பதிவுகளை சரிபார்த்தல் பணிக்கு கச்சாலீஸ்வரர் கோயில் செயல் அலுவலர் பாஸ்கரன், முண்டகக்கண்ணி அம்மன் கோயில் செயல் அலுவலர் லட்சுமி காந்த பாரதிதாசன், கங்காதேஸ்வரர் கோயில் செயல் அலுவலர் செந்தூர்பாண்டியன், மருந்தீஸ்வரர்  கோயில் செயல் அலுவலர் அருட்செல்வன், கோயம்பேடு குறுங்காலீஸ்வரர் கோயில் அலுவலர் நாராயணன் உட்பட 43 பேர் சிறப்பு அலுவலர்களாக நியமிக்கப்படுகின்றனர்.  இவர்கள், பதிவு செய்யப்பட்ட நபர்களின் விவரங்களை சரிபார்த்து உதவி ஆணையருக்கு தெரிவிக்க வேண்டும்.

பதிவு விவரங்களில் குறைபாடுகள் ஏதும் இருந்தால் அன்றைய தினமோ அல்லது மறுநாளோ பதிவு அஞ்சலில் சம்பந்தப்பட்ட நபருக்கு அனுப்பி வைக்க உதவி ஆணையரை கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும், சரிபார்ப்பு பணி முடியும் வரை சிறப்பு பணிக்கு நியமிக்கப்பட்ட சார்நிலை  அலுவலர்கள் ஒவ்வொரும் தங்கள் சிறப்பு பணிக்கு கலந்து ெகாள்ளும் விவரத்தினை உதவி ஆணையரால் ஏற்படுத்தப்படும் வாட்ஸ் அப் குழுவில் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.  அதன்பேரில் அறங்காவலர் குழு தேர்தலில் வாக்களிக்கும் உறுப்பினர்கள் பட்டியல் சரிபார்க்கும் பணி வேகமாக நடந்து வருகிறது. இந்த பணிகள் ஓரிரு நாளில் முடிவடைந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் 10ம் தேதி அறங்காவலர் குழு தேர்தல் நடைபெறும் என அறநிலையத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

Related Stories: