ஜம்மு முன்னாள் எம்எல்ஏவிடம் விசாரணை நடத்த என்ஐஏ முடிவு

ஸ்ரீ நகர்: வடக்கு காஷ்மீரின் லங்கேத் தொகுதியில். அவாமி இத்தேஹத் கட்சியின் தலைவரான ஷேக் அப்துல் ரசீத்  கடந்த 2014ம் ஆண்டு சுயேச்சையாக போட்டியிட்டு எம்எல்ஏ ஆனார். தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் 9ம் தேதி எம்எல்ஏ ரசீத் கைது செய்யப்பட்டார். பின்னர் விடுவிக்கபட்ட அவர் கடந்த 11ம் தேதி சஸ்பெண்ட் செய்யப்பட்ட டிஎஸ்பி தேவந்தர் சிங் என்பவரும் கைது செய்யப்பட்டார். ரசீத் தற்போது நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், ரசீத்தை காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கேட்டு நீதிமன்றத்தை அணுக தேசிய புலனாய்வு அமைப்பு முடிவு செய்துள்ளது. மேலும் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பின் தளபதி சையத் நவீத் முஸ்தாக் அகமத் என்கிற பாபு மற்றும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட போலீஸ் அதிகாரியுடனான தொடர்பு குறித்தும் ரசீத்திடம் விசாரணை நடத்தவுள்ளது.

Related Stories: