கூகுளையும் மிரட்டிய கொரோனா வைரஸ்: சீனாவின் முக்கிய நகரங்களில் கூகுளின் கிளை அலுவலகங்கள் தற்காலிகமாக மூடல்

பீஜிங்: சீனாவின் ஹூபெய் மாகாணத்தின் தலைநகரான வுகானில் சமீபத்தில் மர்மக் காய்ச்சல் காரணமாக இருவர் உயிரிழந்தனர். இது தொடர்பான ஆய்வில், அவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டது. கடல்   உணவு, வனவிலங்கு சந்தையில் நோயினால் பாதிக்கப்பட்ட விலங்குகளிடம் இருந்து இந்த வைரஸ் பரவியதாக கூறப்படுகிறது. சீனாவின் ஹூபெய் மாகாணத்தின் வுகான் நகரில் இருந்து பரவிய கொரோனா வைரஸ், தீவிர நிலையை எட்டி  உள்ளது. கொரோனா வைரஸ், பீஜிங், ஷாங்காய் போன்ற நகரங்களிலும் வேகமாக பரவி வருகிறது. இதனால் பலி எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், சீனாவில் கொரோனா வைரசிற்கு பலியானவர்களின் எண்ணிக்கை 170-க அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 7,700 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பரவி வரும் வேகம் 30 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.

இதற்கிடையே, சீனாவின் முக்கிய பல நகரங்களிலும், ஹாங்காங்கிலும் கூகுளின் கிளை அலுவலகங்கள் செயல்பட்டு வந்தன. கொரோனா வைரஸ் பரவி வருவதை கருத்தில் கொண்டு, அந்த அலுவலகங்களை தற்காலிகமாக கூகுள் நிறுவனம் மூடிவிட்டது. இதேபோல் தைவானிலும் தனது அலுவலகங்களை கூகுள் தற்காலிகமாக மூடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: