மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு கால் இறுதியில், நம்பர் 1 வீரர் ரபேல் நடால் (ஸ்பெயின்) அதிர்ச்சி தோல்வியடைந்து ஏமாற்றத்துடன் வெளியேறினார். கால் இறுதியில் ஆஸ்திரியாவின் டொமினிக் தீமுடன் நேற்று மோதிய நடால் (ஸ்பெயின்) 6-7 (3-7), 6-7 (4-7), 6-4, 6-7 (6-8) என்ற செட் கணக்கில் 4 மணி, 10 நிமிடம் போராடித் தோற்றார். மற்றொரு கால் இறுதியில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரவ் 1-6, 6-3, 6-4, 6-2 என்ற செட் கணக்கில் சுவிஸ் நட்சத்திரம் ஸ்டானிஸ்லாஸ் வாவ்ரிங்காவை வீழ்த்தினார். அரை இறுதியில் டொமினிக் தீம் - ஸ்வெரவ் மோதுகின்றனர். மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதியில் சிமோனா ஹாலெப் (ருமேனியா) 6-1, 6-1 என்ற நேர் செட்களில் அனெட் கோன்டாவெய்ட்டை (எஸ்டோனியா) வீழ்த்தினார். மற்றொரு கால் இறுதியில் அனஸ்டேசியா பாவ்லியுசென்கோவாவுடன் (ரஷ்யா) மோதிய ஸ்பெயின் வீராங்கனை கார்பினி முகுருசா 7-5, 6-3 என்ற நேர் செட்களில் வென்று அரை இறுதிக்கு முன்னேறினார்.