சீனா பல்கலைக் கழகங்களில் படிக்கும் தமிழக மாணவர்களுக்கு பாதிப்பில்லை : தூதரக அதிகாரி கடிதம்

சென்னை: சீனாவில் உள்ள பல்கலைக் கழகங்களில் படிக்கும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் உட்பட இந்திய மாணவர்கள் பாதுகாப்பாக உள்ளனர் என்று சீனாவுக்கான இந்திய தூதரக அதிகாரி தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து சீனாவில் உள்ள இந்திய தூதரகத்தின் துணை தலைமை அதிகாரி அக்யூனோ விமல், தமிழக அரசுக்கு நேற்று எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது: சீனாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் கிருமி குறித்து 24ம் தேதி அன்று கடிதம் எழுதியிருந்தீர்கள். அங்குள்ள சுகாதார நிலை குறித்து இந்திய அரசு மிகவும் உன்னிப்பாக கவனித்து வருகிறது. சீன அரசும் இந்த சூழ்நிலையை நன்றாக ஆராய்ந்து கவனித்து, கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக அடைத்து வைக்கப்பட்டுள்ள நகர்ப்புறங்களில் உள்ள மக்களுக்கு தேவையான உணவு, எரிபொருள் கிடைப்பதை சீன அரசு உறுதி செய்துள்ளது.  

இந்திய தூதரக அதிகாரிகளை 24 மணி நேரமும் தொடர்பு கொள்வதற்கான இரண்டு ஹாட்லைன் போன் எண்களை +8618612083629, +8618612083617 உருவாக்கி இருக்கிறோம். இதுதவிர வீசாட் என்ற இணையதள குழுவை உருவாக்கி அதில் ஹுபெயில் வசிக்கும் இந்தியர்களை இணைத்து அவர்களுக்கு தேவையான தகவல்களை அளிக்கும் வசதியையும் ஏற்படுத்தி இருக்கிறோம். பல்கலைக்கழகங்களில் படிக்கும் இந்திய மாணவர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுகிறதா என்பது பற்றி பல்கலைக்கழக அதிகாரிகள் மற்றும் உள்ளூர் அரசு அதிகாரிகளுடன் இந்திய தூதரகம் தொடர்ந்து பேசி வருகிறது. அங்குள்ள இந்தியர்களுக்கு என்னென்ன தேவைப்படுகிறதோ அவற்றையெல்லாம் கொடுப்பதற்கு இந்திய தூதரகம் தயாராக உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: