புதுக்கல்லூரி அருகே மயக்க நிலையில் ஆடையின்றி சென்ற இளம்பெண் : ராயப்பேட்டையில் பரபரப்பு

சென்னை: ஆடையின்றி இளம்பெண் ஒருவர் சாலையில் நடந்து சென்ற சம்பவம் ராயப்பேட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை ராயப்பேட்டை புதுக்கல்லூரி அருகே நேற்று அதிகாலை 3 மணிக்கு 20 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் உடலில் ஆடையின்றி நடந்து சென்றுள்ளார். இதை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர். அதன்படி ராயப்பேட்டை உதவி ஆய்வாளர் ஜெயராமன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆடையின்றி நடந்து வந்த இளம் பெண்ணுக்கு ஆடை போர்த்திவிட்டார். பின்னர், இளம் பெண்ணிடம் உதவி ஆய்வாளர் விசாரணை நடத்தினார். அப்போது அந்த பெண் தெலுங்கு மொழி மட்டும் பேசி உள்ளார். சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளார்.

Advertising
Advertising

விசாரணையின் இடையே இந்த இளம்பெண் தனக்கு வயிறு வலிப்பதாக கூறி அழுதுள்ளார். அதைதொடர்ந்து அந்த இளம்பெண் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவர் மயக்க நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இளம் பெண்ணின் பாதுகாப்புக்காக அரசு பெண்கள் காப்பக நிர்வாகிகள் உடன் உள்ளனர். இதுகுறித்து ராயப்பேட்டை போலீசார், இளம்பெண்ணை ஆந்திராவில் இருந்து யாரேனும் கடத்தி வந்தார்களா அல்லது மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாரா என்பது குறித்து புதுக்கல்லூரி அருகே உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று விசாரணை நடத்தி வருகின்றனர். மீட்கப்பட்ட இளம் பெண்ணுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர். மேலும், இளம்பெண் யார் என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: