குடிநீர் வாரிய அலுவலகம் இடமாற்றம்

சென்னை: சென்னை குடிநீர் வாரியம், பகுதி அலுவலகம் 10க்கு உட்பட்ட உதவிப் பொறியாளர் அலுவலகம், பணிமனை 129, தற்போது டபுள் டாங்க், ஆர்.கே.சண்முகம் சாலை, கே.கே. நகர், சென்னை என்ற முகவரியில் இயங்கி வருகிறது. இந்த அலுவலகம் நாளை முதல் கதவு எண் 90, தசரதன் தெரு, பாஸ்கர் காலனி, சாலிகிராமம், சென்னை என்ற முகவரியில் புதிதாக கட்டப்பட்ட கட்டிடத்தில் செயல்படும். எனவே, பொதுமக்கள் குடிநீர் மற்றும் கழிவுநீர் தொடர்பான புகார்கள், குடிநீர் வரி மற்றும் கட்டணம் செலுத்துதல் சம்பந்தமாக மேற்கண்ட புதிய முகவரியில் தொடர்பு கொள்ளலாம். உதவிப் பொறியாளரை 81449 30129 என்ற எண்ணிலும், துணைப் பகுதி பொறியாளரை 81449 30229 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

Advertising
Advertising

Related Stories: