சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களில் புதிதாக சுற்றுலா அறிமுகம்: தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் தகவல்

சென்னை: சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களில் புதிதாக சுற்றுலாவை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் அறிமுகப்படுத்தியுள்ளது. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் வெளியிட்ட அறிவிப்பு: சுற்றுலாவை பிரபலப்படுத்தும் நோக்கத்தில் வார விடுமுறையில் சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களில் புதியதாக சுற்றுலா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இச்சுற்றுலா ஒவ்வொரு சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களில் காலை 7 மணிக்கு சென்னை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக தலைமை அலுவலகத்தில் இருந்து (திருவல்லிக்கேணி, டி1 காவல் நிலையம் அருகில்) சென்று மாமல்லபுரம் ஓட்டல் தமிழ்நாடு விடுதியில் காலை உணவு வழங்கப்படுகிறது. மதிய உணவு மற்றும் மாலை நேர சிற்றுண்டி முதலியார் குப்பத்திலும் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில் காலை உணவும், மதிய உணவு, சிற்றுண்டி, படகு சவாரி கட்டணம் ஆகியவை இக்கட்டணத்தில் உள்ளடங்கும். இச்சுற்றுலாவிற்கு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தால் பயன்படுத்தப்படும் குளிர்சாதன வசதியுள்ள சொகுசு பேருந்து இயக்கப்படும். காலை உணவுக்கு பிறகு மாமல்லபுரத்தில் உள்ள சுற்றுலா இடங்களையும் பார்த்த பின்னர் பிற்பகல் 1.30 மணிக்கு முதலியார்குப்பம், படகு குழாம் சென்றடையும். மதிய உணவுக்கு பிறகு இங்கு படகுச் சவாரி செய்த பின்பு 5 மணி அளவில் முதலியார் குப்பத்தில் இருந்து சென்னை வந்தடையும். இச்சுற்றுலாவிற்கு கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ.1200 வசூலிக்கப்படுகிறது. இச்சுற்றுலாவிற்கு குளிர் சாதனப் பேருந்து இயக்கப்படும். மேலும் தொடர்புக்கு, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம், சுற்றுலா வளாகம், வாலாஜா சாலை, சென்னை-2, தொலைபேசி: 044-25333333, 25333444, 25333857, 25333850-54, கட்டணமில்லா தொலைபேசி: 180042531111. www.tamilnadutourism.org, www.ttdconline.com என்ற இணையதள முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அறிவிப்பில் கூறப்ட்டுள்ளது.

Related Stories: