ரிலையன்ஸ் டிஜிட்டலில் குடியரசு தின சிறப்பு விற்பனை

சென்னை: ரிலையன்ஸ் டிஜிட்டல் நிறுவனம் குடியரசு தினத்தை முன்னிட்டு நம்ப முடியாத வகையில் ‘டிஜிட்டல் இந்தியா விற்பனை’ என்ற சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் உள்ள ரிலையன்ஸ் டிஜிட்டலில் மின்னணு சாதனங்கள் வாங்கும் அனைத்தும் வாடிக்கையாளர்களுக்கு ஜனவரி 26ம் தேதி வரையில் கேஷ்பேக்குகள் கிடைக்கும்.  மேலும் டிஜிட்டல் இந்தியா விற்பனை பெரியதாக இருக்கும். இந்த நேரத்தில் பெரிய கேஷ்பேக்குகளுடன், 26% கேஷ்பேக் உள்ளது. இதில் 10% மல்டி பேங்க் கேஷ்பேக் மற்றும் ரிலையன்ஸ் டிஜிட்டலில் இருந்து 16% கேஷ்பேக் ஆகியவை அடங்கும்.

இந்த அற்புதமான சலுகைகள் தொலைக்காட்சிகள், வீட்டு உபகரணங்கள், மொபைல்கள், மடிக்கணினிகள் மற்றும் உதிரிபாகங்கள் வாங்கும்போது பெறலாம். மேலும் இந்த சலுகை அனைத்து ரிலையன்ஸ் டிஜிட்டல், மை ஜியோ கடைகள் மற்றும் reliancedigital.in என்ற இணையதளத்தில் கிடைக்கும்.  ரிலையன்ஸ் டிஜிட்டலில் ஒவ்வொரு கடையிலும் பயிற்சி பெற்ற மற்றும் நன்கு அனுபவம் வாய்ந்த ஊழியர்கள் எப்போதும் ஆலோசனை வழங்குவதில் மகிழ்ச்சி அடைவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: