தமிழக அரசின் தொழில்நுட்ப முறையை கேரளாவில் அறிமுகப்படுத்த உள்ளோம்: கேரள மீன்வளத்துறை அமைச்சர் பேட்டி

சென்னை: தமிழக அரசின் மீன்வளத்துறை மூலமாக செயல்படுத்தப்பட்டு வரும் தொழில்நுட்ப முறையை கேரளாவில் அறிமுகப்படுத்த உள்ளோம் என்று கேரள மீன்வள துறை அமைச்சர் கூறினார். சென்னை சைதாப்பேட்டையில் உள்ள மீன்வளத்துறை அலுவலகத்தில் தமிழக அரசின் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் கேரள அரசின் மீன்வளத்துறை அமைச்சர் மெர்சி குட்டியம்மா ஆகியோர் நேற்று சந்தித்து பேசினர். பின்னர் கேரள மீன்வளத்துறை அமைச்சர் மெர்சி குட்டியம்மா நிருபர்களிடம் கூறும்போது, “தமிழக அரசு மீன்வள துறையில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் சிறப்பாக உள்ளது.

குறிப்பாக கடலில் மீன்பிடிக்க செல்லும் படகுகளை கண்டறிய பயன்படுத்தப்படும் தொழில்நுட்ப முறை மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இதை கேரளாவில் அமல்படுத்த திட்டமிட்டுள்ளோம். தமிழக கேரள அரசின் ஒருங்கிணைப்பு ஒற்றுமை சிறப்பாக உள்ளது. இரு மாநிலங்களும் இணைந்து செயல்படுவோம்” என்று கூறினார். தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறும்போது, “தமிழக அரசு கேரள அரசுக்கு தேவையான உதவிகளை செய்யும். அறிவுப்பூர்வமான, தொழில்நுட்பரீதியான முன்னேற்றங்களை பகிர்ந்து கொண்டோம். தேவைப்பட்டால் கேரள சென்று பேசுவேன்” என தெரிவித்தார்.

Related Stories: