ஈசாந்தை ஊராட்சியில் இடிந்து விழும் நிலையில் தொகுப்பு வீடுகள்: சீரமைக்க மக்கள் கோரிக்கை

சின்னசேலம் :சின்ன சேலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஈசாந்தை ஊராட்சியில் ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு இந்திரா காந்தி நினைவு குடியிருப்பு திட்டத்தின் கீழ் சுமார் 20 தொகுப்பு வீடுகள் கட்டி தந்துள்ளனர். நாளடைவில் தொகுப்பு வீடு கட்டிய ஒரு சிலர் தங்கள் வீடுகளை புதுப்பித்து பெரிதாக கட்டிக்கொண்டதாக தெரிகிறது. இன்னும் சுமார் 10 வீடுகளில் ஏழை, எளிய மக்கள் குடியிருந்து வருகின்றனர்.

Advertising
Advertising

இந்நிலையில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட வீடுகள் தற்போது சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. ஆகையால் மாவட்ட நிர்வாகம் சேதமடைந்த வீடுகளை ஆய்வு செய்து அதே இடத்தில்  பசுமை வீடுகள் கட்ட முன்னுரிமை அளித்து அனுமதி வழங்க வேண்டும். இல்லை எனில் அந்த வீடுகளை சீரமைக்க தனியாக நிதி ஒதுக்கி தர வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories: