நெல்லையில் கி.வீரமணி பேட்டி ரஜினி கருத்து உண்மைக்கு மாறானது

நெல்லை: திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி நெல்லையில் நேற்று அளித்த பேட்டி:  சேலத்தில் 1971ல் திராவிடர் கழகம் சார்பில் பெரியார் தலைமையில் நடந்த பேரணியில் ராமரையும், சீதையையும் இழிவுபடுத்தியதாக ரஜினிகாந்த் சென்னையில் நடந்த ஒரு விழாவில் பேசியுள்ளார். இது உண்மைக்கு மாறான கருத்தாகும். திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்கள் அனைவரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நடிகர் ரஜினிக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தவறான கருத்துக்களை பரப்பிய நடிகர் ரஜினிகாந்த் மீது, நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. வழக்கு விசாரணைக்கு வரும்போது அவர் கூறிய உண்மைக்கு புறம்பான கருத்துக்களுக்கு ஆதாரங்களை சமர்ப்பிப்போம். அதுபோல் ரஜினி தான் தெரிவித்த பத்திரிகையில் வந்த ஆதாரத்தை வெளியிடாமல், வேறு ஒரு பத்திரிகையில் வந்த ஆதாரத்தை வெளியிட்டுள்ளார். ரஜினிக்கு தர்பார் நிச்சயம். ஆனால் ராஜதர்பார் என்பது அவருக்கு நிச்சயம் என்று கூறிவிட முடியாது.  பெரியார் குறித்து அவர் அவதூறாக பேசியதற்கு மன்னிப்பு கேட்பதும், வருத்தம் தெரிவிக்க மாட்டேன் என்று கூறுவதும் அவரது விருப்பம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: