பொங்கல் நாளில் மெட்ரோவில் 7.35 லட்சம் பேர் பயணம்

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விடுமுறை தினங்களில் மெட்ரோ ரயிலில் 7.35 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். இதுகுறித்து மெட்ரோ ரயில்வே அதிகாரி கூறியதாவது: சென்னையில்  வழக் கமான நாட்களில் 60 முதல் 70 ஆயிரம் பேர் மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்துவார்கள். ஆனால், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 13ம் தேதி 1,21,856 பேரும், 14ம் தேதி 1,25,424 பேரும், 15ம் தேதி (பொங்கல் பண்டிகை) 72,845 பேரும், 16ம் தேதி 95,379 பேரும் மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்தியுள்ளனர்.

Advertising
Advertising

இதேபோல், 17ம் தேதியில் இருந்தே வெளி ஊர்களில் இருந்து சென்னை திரும்புபவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. அதன்படி, 17ம் தேதி 1,25,333 பேரும், 18ம் தேதி 98,613 பேரும், 19ம் தேதி 95,823 பேரும் மெட்ரோ ரயிலில் பயணம் செய்துள்ளனர். மொத்தமாக கடந்த 7 நாட்களில் மட்டும் பொங்கல் விடுமுறை பண்டிகையை முன்னிட்டு 7 லட்சத்து 35 ஆயிரத்து 273 பேர் மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்தியுள்ளனர்.

Related Stories: