ஐகோர்ட் கிளையில் நெல்லை கண்ணன் மனு விசாரணை ஒத்திவைப்பு

மதுரை: காங்கிரஸ் பேச்சாளர் நெல்லை கண்ணன் ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்ப பெறக்கோரி நெல்லை  மேலப்பாளையத்தில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் மாநாடு நடந்தது. அதில் கலந்து கொண்டு நான் பேசினேன். அப்போது பிரதமர் மோடி, பாஜ தலைவர் அமித்ஷா குறித்து அவதூறாக பேசியதாக பாஜகவினர் பல இடங்களில் புகார் அளித்தனர். இதன்பேரில் நெல்லை மேலப்பாளையம் போலீசார் என் மீது வழக்குப்பதிந்துள்ளனர்.

நெல்லை மாவட்ட பேச்சுவழக்கிலேயே பேசினேன். அச்சுறுத்தல் ஏற்படுத்தும் நோக்கில் பேசவில்லை.  எனவே, என் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும்’’ என்று கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது புகார்தாரர் தரப்பில் ஆட்சேபம் தெரிவித்து மனு செய்ய அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து மனு மீதான விசாரணையை 2 வாரம் தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

Related Stories: