அறநிலையத்துறை கட்டுபாட்டில் உள்ள கோயில்களுக்கு சொந்தமான கடை, வீடு வாடகை உயர்த்துவது நிறுத்தி வைப்பு

சென்னை: தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில் கட்டிடங்கள், மனைகளுக்கு வாடகை குறைவாக இருப்பதாக கூறி கடந்த 2016ல் புதிதாக வாடகை நிர்ணயம் செய்யப்பட்டது. அப்போது அரசாணையின் படி வழிகாட்டி மதிப்பை அடிப்படையாக வைத்து வாடகை நிர்ணயிக்கப்பட்டது. மேலும், ஒவ்வொரு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை 15 சதவீதம் வாடகை உயர்த்தப்படும் என்று அந்த அரசாணையில் கூறப்பட்டது. அதன்படி கடந்த 2019ல் மீண்டும் வாடகை கட்டணத்தை உயர்த்த வேண்டும். ஆனால், கடந்த 2017ல் வழிகாட்டி மதிப்பு 30 சதவீதம் குறைக்கப்பட்டது. இதையடுத்து வாடகையையும் குறைத்து இருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு செய்யவில்லை.

இதனால், கடந்த 2019ல் வாடகை கட்டணத்தை சந்தை மதிப்பு அடிப்படையில் நிர்ணயிப்பதா அல்லது வழிகாட்டி மதிப்பின் அடிப்படையில் நிர்ணயிப்பதா என்ற குழப்பம் நீடித்து வருகிறது. இது தொடர்பாக தெளிவுரை வழங்க வேண்டும் என்று கோயில் அலுவலர்கள் அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்துக்கு விளக்கம் கேட்டிருந்தனர். ஆனால், அறநிலையத்துறை சார்பில் முறையான தெளிவுரை வழங்கப்படாத நிலையில், வாடகையை உயர்த்தும் முடிவை பெரும்பாலான கோயில் நிர்வாகம் கைவிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

Related Stories: