மாநிலம் முழுவதும் திமுக சார்பில் மொழிப்போர் தியாகிகள் நினைவு நாள் கூட்டம்: 25ம் தேதி மயிலாடுதுறையில் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

சென்னை: திமுக சார்பில் மாநிலம் முழுவதும் மொழிப்போர் தியாகிகள் நினைவு நாள் கூட்டம் நடக்கிறது. மயிலாடுதுறையில் வரும் 25ம் தேதி நடைபெறும் பொதுக் கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசுகிறார்.

ஒவ்வொரு ஆண்டும் தமிழகம் முழுவதும் ஜனவரி 25ம் தேதியை மொழிப்போர் தியாகிகள் தினமாக அனுசரித்து வருகின்றனர். அன்று மாலை தமிழகம் முழுவதும் மொழிப்போரில் உயிர் நீத்த தியாகிகளின் நினைவாக பொதுக் கூட்டம் நடைபெறும். இந்த ஆண்டு திமுக சார்பில் மாநிலம் முழுவதும் நடைபெறும் பொதுக் கூட்டங்களில் பங்கேற்று பேசுகிறவர்களின் பட்டியலை திமுக மாணவர் அணி செயலாளர் எழிலரசன் வெளியிட்டுள்ளார்.அதன்படி மயிலாடுதுறையில் நடைபெறும் கூட்டத்தில், கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார். மதுராந்தகத்தில் பொருளாளர் துரைமுருகன், முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன், தாம்பரத்தில் டி.ஆர்.பாலு, தா.மோ.அன்பரசன், சென்னை தெற்கில் ஐ.பெரியசாமி, மா.சுப்பிரமணியம், ஆவடியில் உதயநிதி ஸ்டாலின், சா.மு.நாசர், சென்னை மேற்கில் தயாநிதி மாறன், ஜெ.அன்பழகன், ஆரூர்.மணிவண்ணன், எஸ்.மோகன், சென்னை கிழக்கில் பொன்.முத்துராமலிங்கம், பி.கே.சேகர்பாபு, நெல்லை மணி, திருத்தணி ரகுமான்கான், பொன்னேரி கவிஞர் ஈரோடு இறைவன், கும்மிடிப்பூண்டி வேணு, க.எழிலன், சென்னை வடக்கில் மனுஷ்ய புத்திரன், மாதவரம் சுதர்சன், காஞ்சிபுரத்தில் தாயகம் கவி ஆகியோர் கூட்டங்களில் பங்கேற்று பேசுகின்றனர்.

Related Stories: