பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறை சித்தன்னவாசலில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர் ; குடும்பத்துடன் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்

இலுப்பூர்: அன்னவாசல் அருகே உள்ள சித்தன்னவாசல் சுற்றுலா மையத்தில் பொங்கல் தொடர் விடுமுறையை முன்னிட்டு சுற்றுலா பயணிகள்  குவிந்தனர். அங்கு குடும்பத்துடன் படகு சவாரி மகிழ்ந்தனர். புதுக்கோட்டையில் இருந்து 15 கி.மீ மணப்பாறை சாலையில் சித்தன்னவாசல் சுற்றுலா  தலம் உள்ளது. இங்குள்ள சமணர் படுக்கை, உலக புகழ்பெற்ற குகை ஓவியம், ஏழடிபட்டம் ஆகியவை மிகவும் புகழ்மிக்கது. மேலும் இங்கு மரங்கள்  சூழ சிற்பங்கள் மற்றும் பொம்மைகளுடன் அமைக்கபட்ட பூங்கா, சிறுவர் விளையாடி மகிழும் விதமாக அமைக்கப்பட்ட பூங்கா, படகு குழாம்  போன்றவைகள் சுற்றுலா பயணிகள் மகிழும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது.

பொங்கல் தொடர் விடுமுறை என்பதால் புதுக்கோட்டை, மணப்பாறை. திருச்சி, விராலிமலை, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டத்தில் பல்வேறு பகுதியில்  இருந்து வந்த திரளான சுற்றுலா பயணிகள் உலக பிரசித்தி பெற்ற மலைமேல் உள்ள சமணர் படுக்கை, குகை ஓவியம் ஆகியவற்றை பார்த்து விட்டு  பூங்காகளில் சுற்றி பார்த்து ரசித்தனர். மேலும் குடும்பத்துடன் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். சில சுற்றுலா பயணிகள் காலை குடும்பத்துடன் வந்து  நாள் முழுவதும் பூங்காங்கள் மற்றும் மழை சூழ்ந்த இயற்கை அழகை கண்டு ரசித்தனர். கேமரா மற்றும் கைபேசி பூங்காக்களில் இருந்த சிலைகள்  மற்றும் பொம்மைகளில் அருகில் இருந்து புகைபடம் எடுத்து கொண்டனர். இளம் பெண்கள் மற்றும் இளைஞர்கள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.  சிறுவர்கள் விளையாட்டு திடலில் அமைக்கப்பட்டிருந்த விளையாட்டு மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த ஊஞ்சல் போன்றவைகளில் ஆடி  விளையாடி மகிழ்ந்தனர்.

Related Stories: