‘மின்திட்டங்களுக்கான நிதியுதவியை மத்திய அரசு நிறுத்தக்கூடாது’

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை: தமிழ்நாடு மின்வாரியத்தின் உற்பத்தித் திறனை அதிகரித்து, தனியாரிடமிருந்து மின்சாரம் வாங்குவதை நிறுத்துவதன் மூலம்தான் இழப்பை தவிர்க்க முடியும். அதற்கு அதிக எண்ணிக்கையில் மின்திட்டங்களை செயல்படுத்தினால் மட்டும்தான் இது சாத்தியமாகும். அதற்கு மத்திய மின் நிதி நிறுவனங்களின் உதவி தேவை. மத்திய மின்நிதி நிறுவனங்கள் கடன் வழங்குவதை நிறுத்தி விட்டால், மின்திட்டங்களை செயல்படுத்த முடியாமல் தமிழ்நாடு மின்சார வாரியம் திவாலாகும் நிலைக்கு சென்று விடும். எனவே இந்த முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என ராமதாஸ் விடுத்த அறிக்கையில் கூறியுள்ளார்.

Related Stories: