தமிழக மக்களுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தமிழில் பொங்கல் வாழ்த்து

சென்னை: தமிழக மக்களுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தமிழில் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். பொங்கல் திருநாள் அனைத்து குடும்பங்களுக்கும் மிகுதியான மகிழ்ச்சி, செழிப்பை அள்ளித்தர வாழ்த்துகிறேன் என்று ஆளுநர் கூறியுள்ளார். கொண்டாட்டம், சமத்துவம், சகோரத்துவம் ஆகியவற்றை உள்ளடக்கியதாக பொங்கல் அமையட்டும். நாம் பெற்ற அளவற்ற அறுவடைக்காக தை திருநாளில் இயற்க்கைக்கு பிரார்த்தனை, நன்றி செலுத்துவோம் என்று ஆளுநர் தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பொங்கல் விழா வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை மாதவரத்திலுள்ள தனியார் பெண்கள் கல்லூரியில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் மாணவிகள் பட்டுப்புடவை அணிந்து வந்து புதுப்பானையில் பொங்கலிட்டு மகிழ்ந்தனர். கும்பகோணம் அருகே கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் திரளான மாணவ - மாணவிகள் பங்கேற்று திரைப்பட நாட்டுப்புறப் பாடல்களுக்கு நடனமாடி அசத்தினர். செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள தனியார் மழலையார் மற்றும் தொடக்கப்பள்ளியில், பொங்கல் விழா உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.

பொங்கலை முன்னிட்டு சென்னையிலிருந்து இதுவரை 6,10,736 பேர் சிறப்பு பேருந்துகள் மூலம் சொந்த ஊர்களுக்கு பயணம் செதுள்ளனர். 12,192 பேருந்துகள் மூலம் 6,10,736 பயணிகள் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

Related Stories: