நாட்டில் வெறுப்புணர்வை பரப்பி மக்களை பிளவுபடுத்த முயற்சி; மத்திய அரசுக்கு சோனியாகாந்தி, ராகுல்காந்தி கண்டனம்

புதுடெல்லி: நாட்டில் வெறுப்புணர்வை பரப்புவதாகவும் ஒடுக்கு முறையை கட்டவிழ்த்துவிட்டு உள்ளதாகவும் மத்திய அரசுக்கு காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியாகாந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். தற்போதைய அரசியல் சூழ்நிலை மற்றும் மாணவர்கள் போராட்டம் குறித்த எதிர்கட்சிகள் கூட்டம் சோனியாகாந்தி தலைமையில் நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தேசியவாத காங்கிரஸ் சார்பில் சரத்பவார், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் திருமாவளவன் உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். கூட்டத்தில் சோனியாகாந்தி

மத அடிப்படையில் மக்களை மத்திய அரசு பிளவுபடுத்த முயற்சி செய்வதாக குற்றம் சாட்டினார். அரசியல் சட்டத்தை மத்திய அரசு அவமதிப்பதாகவும், அரசு இயந்திரங்களை தவறகாப் பயன்படுத்துவதாகவும், நாடு முழுவதும் முன் எப்போதும் இல்லாத வகையில் மக்களிடையே கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளதாக சோனியாகாந்தி தெரிவித்தார்.

பொதுமக்கள் ஆதரவுடன் நாடு முழுவதும் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதாகவும், பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் மக்களை தவறாக வழிநடத்துகிறார்கள் என்று சோனியாகாந்தி தெரிவித்துள்ளார். மக்களுக்கு பாதுகாப்பு அளிப்பதில் மத்திய அரசு செயலற்றதாக இருக்கிறது என்று குற்றம் சாட்டிய சோனியா, பிரச்னைகளை ஏற்படுத்தி பொருளாதார மந்த நிலையில் இருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்ப முயற்சி செய்வதாக கடுமையாக சாடினார். இக்கூட்டத்தை ஏற்கெனவே திரிணாமூல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ், சிவசேனா உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்துள்ளனர்.  

நாட்டை பிளவுபடுத்துகிறார் பிரதமர் மோடி - ராகுல் கண்டனம்

ஜே.என்.யு. பல்கலை கழகத்தில் நடத்தப்பட்ட வன்முறைக்கு ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற எதிர்கட்சிகள் கூட்டத்துக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல்காந்தி, நாட்டை பிளவுபடுத்த பிரதமர் மோடி முயல்வதாக குற்றம் சாட்டினார். பொருளாதாரத் துறையில் மத்திய அரசு படுதோல்வி அடைந்துவிட்டதாக ராகுல்காந்தி விமர்சனம் செய்தார்.

Related Stories: