சாலை விபத்துகளை வெகுவாக குறைந்த மாநிலங்களில் தமிழகம் முதலிடம்: மத்திய அரசிடம் விருது பெற்றார் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர்

டெல்லி: கரூர் பஸ் நிலையத்தில் ரூ.4 கோடி மதிப்பில் ரெட் பஸ் எனப்படும் 15 நகர பேருந்துகள் துவக்க விழா நேற்று நடந்தது. இதில் போக்குவரத்துதுறை  அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்து கொண்டு புதிய பேருந்துகளை துவக்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: சென்னையில் பொங்கல்  பண்டிகையையொட்டி அனைவரும் பாதுகாப்பாக தங்கள் பகுதிக்கு செல்ல சென்னையில் மட்டும் 5 தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன  என்றார்.

தொடர்ந்து, பேசிய அவர், இந்திய அளவில் சாலைபாதுகாப்பு, சாலை விபத்துகள் போன்றவை வெகுவாக குறைந்த மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தை  பெற்றுள்ளது. இதை நாடாளுமன்றத்தில் மத்திய தரைவழி போக்குவரத்துதுறை அமைச்சர் நிதின்கட்கரி அறிவித்துள்ளார். இதன் அடிப்படையில் மத்திய அரசு  வழங்கவுள்ள விருதை நான் உள்பட துறை அதிகாரிகள் டெல்லி சென்று பெறவுள்ளோம் என்றார். சாலை விபத்துகளை குறைப்பதில் சிறந்து விளங்கியதாக  தமிழக அரசுக்கு டெல்லியில் விருது வழங்கப்பட்டுள்ளது. டெல்லி விக்யான் பவனில் நடைபெற்ற விழாவில் தமிழக அரசு சார்பில் போக்குவரத்துறை அமைச்சர்  எம்.ஆர் விஜயபாஸ்கர் விருதை பெற்றுக்கொண்டார்.

Related Stories: