தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் தாக்கியும், பாம்பு கடியால் பாதிக்கப்பட்டும் உயிரிழந்த 24 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ. 3 லட்சம் நிதியுதவி : முதல்வர் அறிவிப்பு

சென்னை : தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெவ்வேறு காலக்கட்டங்களில் மின்விபத்து உள்ளிட்ட காரணங்களால் உயிரிழந்த 24 பேரின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தலா 3 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், மின்சாரம் தாக்கியும், பாம்பு கடியால் பாதிக்கப்பட்டும் உயிரிழந்த 24 பேரின் குடும்பங்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துள்ளார்.இந்த துயரச் சம்பவங்களில் உயிரிழந்த 24 பேரின் குடும்பங்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா 3 லட்ச ரூபாய் நிவாரணமாக வழங்க உத்தரவிட்டுள்ளதாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

*விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், பாலப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ஜெயகாந்த் என்பவர் எதிர்பாராத விதமாக அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததில், மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

*விக்கிரவாண்டி வட்டம் கிராமத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர்  விவசாய நிலத்திற்கு சென்ற போது அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

*வேலூர் மாவட்டம் பலவன்சாத்து கிராமத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பவர் தனது வீட்டின் மாடிக்குச் சென்ற போது, எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

*திருவாரூர் மாவட்டம் பெருமாளகரம் கிராமத்தைச் சேர்ந்த நாடிமுத்து என்பவர் விவசாய நிலத்திற்கு சென்று கொண்டிருந்த போது, மின் கம்பி அறுந்து விழுந்து மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

* விருதுநகர் மாவட்டம் மேலராஜகுலராமன் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர் பாம்பு கடித்து உயிரிழந்தார்.

Related Stories: