தமிழகத்திலேயே முதன்முறையாக நீலகிரி மாவட்ட ஊராட்சி தலைவராக பழங்குடியினத்தை சேர்ந்த பொன்தோஸ் தேர்வு

ஊட்டி: நீலகிரி மாவட்ட ஊராட்சி மன்ற தலைவருக்கான மறைமுகத் தேர்தலில் தி.மு.க.,வை சேர்ந்த தோடர் பழங்குடியினரான பொன்தோஸ் வெற்றி பெற்றார் .தமிழகத்தில் முதன்முறையாக தோடர் பழங்குடியினர் சமுதாயத்திலிருந்து தலைவராக பதவியேற்ற முதல் நபர் என்ற பெருமையை பெற்றார்.

மறைமுக தேர்தல்

தமிழகத்தில் இரண்டு கட்டங்களாக நடைபெற ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் கடந்த 6ம் தேதி பதவி ஏற்றுக் கொண்டனர். இதையடுத்து மாவட்ட ஊராட்சித் தலைவர், துணைத் தலைவர், ஒன்றிய தலைவர், துணைத் தலைவர், ஊராட்சி துணைத் தலைவர் ஆகிய 5 பதவிகளுக்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது.

27 மாவட்ட ஊராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவர்களையும், 314 ஊராட்சி ஒன்றிய தலைவர் மற்றும் துணைத்தலைவர்களையும், 9624 கிராம ஊராட்சி துணை தலைவர்களையும் தேர்வு செய்ய மறைமுக தேர்தல் நடக்கிறது.மாவட்ட தலைவர், ஒன்றிய தலைவர் பதவிக்கு இன்று காலை 11 மணிக்கும், மாவட்ட, ஒன்றிய, ஊராட்சி மன்ற துணை தலைவர் தேர்தல் மதியம் 3.30 மணி அளவிலும் நடைபெற உள்ளது.

இதில் வெற்றி பெற்றவர்களின் விவரம் பின்வருமாறு...

மாவட்ட ஊராட்சி தலைவர்  (27)

 அதிமுக 14                                     

 திமுக  12

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர், துணைத்தலைவர் தேர்தலை ரத்துசெய்து மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் உத்தரவிட்டு உள்ளார். சட்டம்-ஒழுங்கு பிரச்னையை காரணம் காட்டி, தேதி குறிப்பிடாமல் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

Related Stories: