சிஏஏ,என்ஆர்சி விவகாரங்கள் குறித்து விவாதிக்க காங்கிரஸ் செயற்குழு இன்று கூடுகிறது: ராகுல் மீண்டும் தலைவராகிறார்?

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் இன்று பிற்பகல் அக்பர் சாலையில் உள்ள கட்சி அலுவலகத்தில் கூடுகிறது. நாடு முழுவதும் குடியுரிமை திருத்தம் சட்டம் மற்றுமு் தேசிய குடிமக்கள் பதிவேடு உள்ளிட்டவற்றிற்கு எதிராக போராட்டங்கள் நடந்து வருகிறது. இச்சட்டத்திற்கு எதிராக போராடிய பல்கலை கழக மாணவர்கள் மீது போலீசார் தடியடி பிரயோகம் செய்தனர். இதுதவிர, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (ஜே.என்.யூ) சமீபத்தில் நடந்த  வன்முறைகள் குறித்து ஆராய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அமைத்த குழுவின்  அறிக்கையும் இன்றைய காரிய கமிட்டி கூட்டத்தில் விவாதிக்கப்படலாம் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

இதுதவிர, நாட்டில் நிலவும் பொருளாதார மந்திநிலை உள்ளிட்ட விவகாரங்கள் பற்றியும் விவாதிக்கப்படலாம். மிக முக்கியமாக இன்றயை கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக மீண்டும் ராகுல் காந்தியை தேர்வு செய்வதற்கான வாய்ப்புகளும் உள்ளதாக கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Stories: