நகராட்சி, உள்ளாட்சி நிர்வாகத்தில் அதிகாரிகள், அமைச்சர்கள் சொல்வது சட்டமாக உள்ளது: பேரவையில் எஸ்.ஆர்.ராஜா எம்எல்ஏ பேச்சு

சென்னை: சட்டப்பேரவையில் நேற்று தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா (திமுக) பேசியதாவது:உள்ளாட்சித்துறை மூன்றாம் நிலை நகராட்சி என்பதை மட்டும் எடுத்துவிட்டு, இரண்டாம் நிலை நகராட்சியாக இருக்க வேண்டும் என்ற திருத்த சட்டத்தினை கொண்டு வந்திருக்கிறது. தற்போது சில மாவட்டங்களை பிரித்திருக்கின்றார்கள். இந்த மூன்றாம் நிலை நகராட்சியை மட்டும் எடுத்திருக்கிறார்கள். தாம்பரம் நகராட்சியில் இருந்து கடந்து, சிட்லப்பாக்கம் பேரூராட்சியை கடந்து, பல்லாவரம் நகராட்சியை கடந்து, திருநீர்மலை பேரூராட்சியையும் கடந்து, தாம்பரம் நகராட்சியின் எல்லை இருக்கிறது.

ஒரு நகராட்சி, உள்ளாட்சி நிர்வாகம் எப்படியிருக்கிறது என்றால், அதிகாரிகள் வைத்தது ஒரு சட்டம், அமைச்சர் சொல்வதும் ஒரு சட்டம். வருகிறவர்கள், போகிறவர்கள் சொல்வதையெல்லாம் கேட்டு கொண்டு அரசு செயல்படுகிறதா? என்பது ஒரு கேள்விக்குறியாக இருக்கிறது. எப்படி மாவட்டத்தை, நாடாளுமன்ற தொகுதி, சட்டமன்ற தொகுதி என பிரிக்கிறீர்களோ, அதைப்போல ஒரு தடவையாக பிரியுங்கள்.  ஊராட்சியை, பேரூராட்சியாக்காமல். பேரூராட்சியை நகராட்சியாக்காமல், நகராட்சியை மாநகராட்சியாக்காமல, மூன்றாம் நிலையை எடுத்துவிடுவதை நிறுத்தி ஒட்டுமொத்த தமிழ்நாட்டை மாற்றியமைக்க வேண்டும். இந்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: