75வது சுதந்திர ஆண்டில் புதிய கட்டிடத்தில் நாடாளுமன்ற தொடர் : மக்களவை சபாநாயகர் உறுதி

புதுடெல்லி:நாடாளுமன்ற சபாநாயகர்கள், காமன்வெல்த் தலைமை அதிகாரிகளின் 25வது உச்சி மாநாடு, கனடா நாட்டின் தலைநகர் ஓட்டாவில் கடந்த 6ம் தேதி தொடங்கியது. இம்மாநாடு நாளை மறுநாளுடன் நிறைவடைகிறது. இதில்,  மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கலந்து கொண்டார். இதில் அவர் ஆற்றிய உரையை மக்களவை செயலகம் நேற்று அறிக்கையாக வெளியிட்டது. அதில், கூறப்பட்டு இருப்பதாவது:

கடந்த 1927ம் ஆண்டு செயல்பட தொடங்கிய இந்திய நாடாளுமன்றம் 92 வருடங்களை கடந்துள்ளது. புதிய நாடாளுமன்ற கட்டிடம் இந்தியா, அதன் குடிமக்களின் எண்ணங்களை பிரதிபலிப்பதாக அமைய இருக்கிறது. இந்தியாவின் மரபு, பாரம்பரிய கலாசாரம் ஆகியவற்றின் உருவமாக திகழும். நாட்டின் 75வது சுதந்திர தின ஆண்டில், இந்த புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் கூட்டத் தொடர்கள் நடக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: