வளிமண்டலத்தில் வேக மாறுபாடு காரணமாக வடமாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை முடிவுக்கு வர உள்ள நிலையில் தொடர்ச்சியாக வெப்ப சலனம் நீடித்து வருகிறது. இதனால், சில இடங்களில் இயல்பைவிட  கூடுதலாக மழை பெய்துள்ளது. இதேபோல், தமிழகத்தில் நிலவும் வெயில் காரணமாக வெப்ப சலனம் நீடித்து வருகிறது. இந்நிலையில் வளிமண்டலத்தில் வேக மாறுபாடு காரணமாக வட மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்;  சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், புதுச்சேரி, விழுப்புரம், மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.

நாகப்பட்டினம், தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களிலும் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையில் 3. செ.மீ.மழை பதிவாகி உள்ளது.

சென்னையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் தெரிவித்தது.

Related Stories: