வைகுண்ட ஏகாதசியையொட்டி வைணவ தலங்களில் சொர்க்க வாசல் திறப்பு: அதிகாலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்

சென்னை: வைகுண்ட ஏகாதசியையொட்டி வைணவ தலங்களில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. மார்கழி மாதம் வளர்பிறை ஏகாதசி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. திருமங்கையாழ்வார் இந்த ஏகாதசியை வைகுண்ட ஏகாதசி உற்சவமாகக் கொண்டாட ஏற்பாடு செய்தார். ஏகாதசி என்ற சொல்லுக்குப் பதினோராம் தினம் என்று பொருள். ஞானேந்திரியங்கள் ஐந்து. கர்மேந்திரியங்கள் (வாக்கு, பாதம், பாணி, பாயு, உபத்தம்) ஐந்து. மனம் ஒன்று ஆகிய பதினொன்றையும் பெருமாளுடன் ஐக்கியப்படுத்தித் தியானம் இருப்பதே ஏகாதசி விரதம். வைகுண்ட ஏகாதசி அன்று இறந்தவர்களுக்கு மறுபிறவி இல்லை. பெருமாளின் பாதத்தில் போய் சேர்ந்து விட்டார், என்பதற்கு வேறு காரணம் உண்டு. வாழ்நாள் முழுவதும் இறைபக்தியுடனும், தர்ம சிந்தனையுடனும், இனிய குணத்துடனும் இருப்பவர்களே ஏகாதசியன்று மரணம் அடைவர் என்பதால் இவர் சொர்க்கத்திற்குள் செல்வது உறுதி என்பர்.

இதற்கிடையே, வைகுண்ட ஏகாதசியையொட்டி வைணவ தலங்களில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில், திருப்பதி ஏழுமலையான் கோவில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில்களில் சொர்க்க வாசல் திறப்பு தரிசனத்தை காண பக்தர்கள் குவிந்துள்ளனர். அதனைபோன்று, காரைக்குடி அருகில் அரியக்குடிதென்திருப்பதி என்று அழைக்கப்படும் அருள்மிகு திருவேங்கடமுடையான் கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். வேலூர் மாவட்டம் பள்ளிகொண்ட 1500 ஆண்டு பழைமையான உத்திர ரங்கநாதர் கோயில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. இதனைபோன்று பல்வேறு இடங்களில் உள்ள பெருமாள் கோயில்களில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. இதில், அதிகாலை முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று பெருமாள் தரிசனம் பெற்றனர்.

Related Stories: