உடல்நலக் குறைவால் தமிழக சட்டப்பேரவைaயின் முன்னாள் சபாநாயகர் பி.ஹெச்.பாண்டியன் காலமானார்

சென்னை: தமிழக முன்னாள் சட்டப்பேரவை முன்னாள் சபாநாயகர் பி.ஹெச்.பாண்டியன்(75) காலமானார். உடல் நலக்குறைவால் சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது சிகிச்சை பலனின்றி பி.ஹெச்.பாண்டியனின் உயிர் பிரிந்தது. 75 வயதான பி.ஹெச்.பாண்டியன் நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியில் பிறந்தார். இவர் எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்த போது சட்டப்பேரவை சபாநாயகராக பணியாற்றியுள்ளார். 1980-ம் ஆண்டு துணை சபாநாயகராகவும், 1984-ம் ஆண்டு சபாநாயகராகவும் பி.ஹெச்.பாண்டியன் பணியாற்றினார். மேலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகவும் பணியாற்றியுள்ளார். 1977, 1980, 1984 ஆகிய ஆண்டுகளில் அதிமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினராக பி.ஹெச்.பாண்டியன் தேர்வானவர்.

பி.ஹெச்.பாண்டியன் வாழ்க்கை குறிப்பு

திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவியை சேர்ந்தவர் பி.ஹெச்.பாண்டியன். அதிமுக எம்.எல்.ஏ. மற்றும் எம்.பி.யாகவும் பணியாற்றியுள்ளார். எம்.ஜி.ஆர். மறைவுக்கு பின் ஜெயலலிதாவுக்கு எதிராக ஜானகி அணியில் பி.ஹெச்.பாண்டியன் இடம் பெற்றார். 1989-ம் ஆண்டில் அதிமுக இரண்டாக பிரிந்த போது ஜானகி அணி சார்பில் பி.ஹெச்.பாண்டியன் மட்டுமே வெற்றி பெற்றார். பின்னர் மீண்டும் ஜெயலலிதா அணியில் சேர்ந்த பி.ஹெச்.பாண்டியன் அதிமுகவின் அமைப்பு செயலாளராக பணியாற்றினார்.

அமைச்சர்கள் ஜெயக்குமார், கடம்பூர் ராஜு இரங்கல்

முன்னாள் சபாநாயகர் பி.ஹெச்.பாண்டியன் மறைவு அதிமுகவுக்கு பேரிழப்பு - அமைச்சர் ஜெயக்குமார்

முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆருக்கு பக்கபலமாக இருந்தவர் பி.ஹெச்.பாண்டியன்; இவரின் மறைவு தென்மாவட்டங்களுக்கு பேரிழப்பு - அமைச்சர் கடம்பூர் ராஜு

Related Stories: