பாஸ்போர்ட் கிடைக்காமல் அவதி நேபாளி போல் தோற்றமளிக்கும் இரு சகோதரிகள் இந்தியர்களா? விசாரணை நடத்த உத்தரவு

சண்டிகர்: நேபாளிகள் போல் தோற்றமளிக்கும் இரு சகோதரிகள், இந்தியர்களா என விசாரிக்கும்படி அரியானா போலீசிடம் மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் கூறியுள்ளது.  அரியானாவைச் சேர்ந்த சகோதரிகள் சந்தோஷ், ஹீனா. இருவரும் பாஸ்போர்ட் கேட்டு சண்டிகர் பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பித்தனர். அவர்கள் இருவரும் நேபாளிகள்போல் தோற்றம் அளித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த மண்டல பாஸ்போர்ட் அலுவலக அதிகாரி சிபாஸ் கபிராஜ், சகோதரிகள் இருவரும் இந்தியர்களா என விசாரிக்கும்படி அம்பாலா போலீஸ் துணை கமிஷனரிடம் வேண்டுகோள் விடுத்தார். இது குறித்து கபிராஜ் கூறியதாவது: குடியுரிமை சட்டப்படி ஒருவர் 1950 மற்றும் 1987ம் ஆண்டுக்கு இடையே இந்தியாவில் பிறந்திருந்தால், அவர்களின் பெற்றோர் யாராக இருந்தாலும் அவர் இந்திய குடிமகனாக கருதப்படுவார்.

ஒருவர் 1987ம் ஆண்டு முதல் 2004ம் ஆண்டு வரை இந்தியாவில் பிறந்திருந்தால், அவர்களின் பெற்றோரில் ஒருவர் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும். 2004ம் ஆண்டுக்கு பிறகு பிறந்தவர்களின் பெற்றோர் இருவரும் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும். அவர்கள் சட்ட விரோத குடியேறிகளாக இருக்கக் கூடாது. தற்போது விண்ணப்பித்துள்ள சகோதரிகள் இருவரும் 1987ம் ஆண்டுக்கு பிறகு பிறந்தவர்கள். இவர்களின் பெற்றோரில் ஒருவர் இந்தியராக இருக்க வேண்டும். ஆனால், இவர்களின் குடும்பம் நேபாளத்தை சேர்ந்ததாக இருக்கலாம்.  இது குறித்து விசாரித்து, ஒரு வாரத்துக்குள் அறிக்கை தாக்கல் செய்யும்படி அம்பாலா எஸ்.எஸ்.பி.யிடம் கூறியுள்ளோம்.

Related Stories: