வட தமிழகம், அதனை ஒட்டிய கர்நாடக பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகம், புதுவையில் லேசான மழைக்கு வாய்ப்பு

சென்னை : வட தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய கர்நாடக பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிக்கையில் விடுத்துள்ளது. மேலும் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஓரிரு இடங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் பர்லியர் பகுதியில் தலா 4 செ.மீ. மழையும் திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கத்தில் தலா 3 செ.மீ. மழையும் நீலகிரி மாவட்டம் நடுவட்டம் மற்றும் குகுனூர் ஆகிய பகுதிகளில் தலா 1 செ.மீ, மழையும் பதிவாகியுள்ளது.   அடுத்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமான வெப்பநிலை 32 டிகிரி செல்ஷியஸும் குறைந்தபட்சமான வெப்பநிலை 24 டிகிரி செல்ஷியஸும் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: