திருச்செங்கோடு ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் திருநங்கை ரியா வெற்றி

திருச்செங்கோடு: நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு  ஒன்றியத்திற்கு உட்பட்ட 2வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட திருநங்கை ரியா வெற்றி பெற்றார்.  நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஒன்றியத்திற்கான உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை அங்குள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. இதில் 2-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு திமுக வேட்பாளராக போட்டியிட்ட திருநங்கை ரியாவுக்கு 2,701 வாக்குகள் கிடைத்தது. அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் கந்தம்மாள் 1751 வாக்குகள் பெற்றிருந்தார். இதையடுத்து 950 வாக்குகள் வித்தியாசத்தில் ரியா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு, அதற்கான சான்றிதழை தேர்தல் அலுவலர் பாலசுப்ரமணியம் வழங்கினார்.   தேர்தல் வெற்றி குறித்து ரியா கூறுகையில், ‘‘பாகுபாடு பார்க்காமல் எனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இந்த வெற்றியை கலைஞரின் நிழலாக இருந்து எனக்கு வாய்ப்பளித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு சமர்ப்பிக்கிறேன். முதல் வேலையாக  எனது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் பிரச்னையை தீர்க்க நடவடிக்கை எடுப்பேன்’’ என்றார்.

Related Stories: