திருத்தணி முருகன் கோவிலில் திருப்படித் திருவிழா: புத்தாண்டையொட்டி சிறப்பு பூஜை, வழிபாடு

திருவள்ளூர்: அறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணி முருகன் கோவிலில் புத்தாண்டையொட்டி திருப்படித் திருவிழா கோலாகலமாக நடைப்பெற்று  வருகிறது.  புத்தாண்டையொட்டி  இரண்டு நாட்கள் நடைப்பெறும் இவ்விழாவிற்காக பக்தர்கள் கோவில் படிகளுக்கு மலர் அலங்காரம் செய்து அரோகரா முழக்கத்துடன் வழிபாடு மேற்கொண்டனர்.  ஓர் ஆண்டை குறிக்கும் வகையில் கோவிலில் அமைந்துள்ள 365 படிகளுக்கும்  மஞ்சள், குங்குமம் பூசி பக்தர்கள் திருப்புகழ் பாடினர்.  விழா தொடங்கியதைத் தொடர்ந்து திருப்பதி, சென்னை, வேலுார், காஞ்சிபுரம், வல்லக்கோட்டை மற்றும் திருவண்ணாமலை ஆகிய இடங்களில் இருந்து, வழக்கத்திற்கு மாறாக அதிகளவில் பக்தர்கள் வருவர்கள். 

மேலும், இன்று அதிகாலை, 4:30 மணி முதல், ஜனவரி 1-ம் தேதி இரவு, 9:30 மணி வரை, முருகன் கோவில் நடை தொடர்ந்து திறந்திருக்கும் என்பதால், இரவு, பகலாக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மேற்கண்ட ஊர்களில் இருந்து, மலைக்கோவிலுக்கு வந்து, மூலவரை தரிசிப்பார்கள். இதனால் கோவிலில் கூட்ட நெரிசலை தவிர்க்க கண்காணிப்பு கேமராக்களும், பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

Related Stories: