இந்திய ராணுவத்தின் 28-வது தலைமை தளபதியாக பொறுப்பேற்ற மனோஜ் முகுந்த் நராவனேவிடம் தனது பொறுப்புகளை ஒப்படைத்தார் பிபின் ராவத்

டெல்லி : இந்திய ராணுவத்தின் 28 வது தலைமைத் தளபதியாக மனோஜ் முகுந்த் நராவனே இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். மனோஜ் முகுந்த் நராவனேவிடம் தனது பொறுப்புகளை ஒப்படைத்தார் பிபின் ராவத்.

யார் அந்த மனோஜ் முகுந்த் நராவனே ?

*நாட்டின் புதிய ராணுவ தலைமை தளபதியாக மனோஜ் முகுந்த் நரவனே நியமிக்கப்பட்டுள்ளார். புதிய ராணுவ தளபதி நரவனே, சென்னை பல்கலைக் கழகத்தில் பாதுகாப்பு தொடர்பாக முதுகலை பட்டம் படித்தவர்.

*நரவனே, தற்போது கிழக்கு பிராந்திய தளபதியாக இருக்கிறார். மகாராஷ்டிராவின் புனேவின் பள்ளி படிப்படை முடித்தார் நரவனே. புனே தேசிய பாதுகாப்பு அகாடமி, டேராடூன் இந்திய ராணுவ அகாடமியிலும் சென்னை பல்கலைக் கழகத்தில் பாதுகாப்பு தொடர்பாக முதுகலை பட்டமும் படித்தவர்.

*1980-ம் ஆண்டு 7-வது சீக்கியர் படைப்பிரிவில் இணைந்தார்.வடகிழக்கு மாற்றும் காஷ்மீரில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர், 2017-ம் ஆண்டு குடியரசு தின ராணுவ அணிவகுப்பின் தளபதியாகவும் பணியாற்றியவர் நரவனே. கடந்த செப்டம்பர் 1-ந் தேதி ராணுவ துணை தளபதியாக நியமிக்கப்பட்டார்.

*நராவனே, சீனாவுடனான எல்லையை பாதுகாக்கும் இந்திய ராணுவத்தின் கிழக்கு படைப் பிரிவுக்கு தலைமை வகித்து வந்தார்.

*கடந்த 37 ஆண்டுகளாக ராணுவ பணியில் இருக்கும் நராவனே, ஜம்மு-காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் கிளர்சியை கட்டுப்படுத்துவது, அமைதி நடவடிக்கைகள் மேற்கொள்வதில் சிறப்பாகப் பணியாற்றியுள்ளார்.

*ஜம்மு-காஷ்மீரில் ராஷ்ட்ரீய ரைஃபிள்ஸ் படைப்பிரிவு மற்றும் காலாட் படையின் கமாண்டராக இருந்துள்ளார்.

நியமனத்திற்கான காரணம்

இந்தியாவின் ராணுவம், விமானப்படை, கடற்படை ஆகிய முப்படைகளுக்கும் சேர்ந்து ஒரே தலைமைத் தளபதி பதவியை உருவாக்குவதற்கு மத்திய அமைச்சரவை சமீபத்தில் அனுமதி அளித்தது.  இந்நிலையில், தற்போது ராணுவ தலைமை தளபதியாக இருக்கும் பிபின் ராவத், இன்று பதவி ஓய்வு பெறுகிறார். இதனால் அவர் நான்கு நட்சத்திர அந்தஸ்து கொண்ட முப்படைகளின் தலைமை தளபதியாக பிபின் ராவத்தை மத்திய அரசு அதிகாரபூர்வமாக நேற்று இரவு நியமித்துள்ளது. அவர், பாதுகாப்புப் படை முழுவதுக்குமான தலைவராக இருப்பார். இந்திய ராணுவ தலைமைத் தளபதியாக இருந்த பிபின் ராவத் இன்றுடன் ஓய்வு பெறும் நிலையில், ராணுவ துணைத் தளபதியான முகுந்த் நராவனே, ராணுவ தலைத் தளபதியாக இன்று பொறுப்பேற்றார்.

Related Stories: