புத்தாண்டு தினத்தன்று ரூ.250 கோடிக்கு மது விற்பனை செய்ய டாஸ்மாக் நிர்வாகம் இலக்கு

சென்னை: புத்தாண்டு தினத்தன்று ரூ.250 கோடிக்கு மது விற்பனை செய்ய டாஸ்மாக் நிர்வாகம் இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. உள்ளாட்சித் தேர்தல் காரணமாக மூடப்பட்டிருந்த டாஸ்மாக் கடைகள் இன்று மீண்டும் திறக்கப்படுகிறது. ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்படும் நாளான 2ம் தேதி டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது. 2018-2019 ம் ஆண்டில் மதுவிற்பனை மூலம் ரூ.31,157 கோடி வருமானம் கிடைத்துள்ளது என்று டாஸ்மாக் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

புதிய சீருடை:

டாஸ்மார் எலைட் மதுககடையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு புத்தாண்டு முதல் புதிய சீருடை வழங்கப்பட உள்ளது சென்னையில் உள்ள 31 எலைட் மதுக்கடைகளில் பணியாற்றுவோருக்கு கோட் சூட் வழங்க டாஸ்மாக் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. சென்னை தவிர பிற ஊர்களில் உள்ள 52 எலைட் மதுக்கடைகளிலும் பணியாளர்களுக்கு புதிய சீருடை வழங்கப்பட உள்ளது.

Related Stories: