டெல்லியில் பிரதமர் மோடி இல்லத்தில் தீ விபத்து

டெல்லி: டெல்லியில் பிரதமர் மோடி இல்லத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பிரதமர் மோடி இல்லத்தில் பிடித்த தீயை அணைக்க 9 வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் விரைந்துள்ளனர். டெல்லியில் லோக் கல்யாண் மார்க் பகுதியில் பிரதமர் இல்லம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

டெல்லி லோக் கல்யாண் மார்க் பகுதியில் பிரதமரின் இல்லத்தின் வெளியேயுள்ள எஸ்.பி.ஜி வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சிறப்பு பாதுகாப்பு குழுவின் (எஸ்பிஜி) கட்டிடத்தின் வளாகத்தில் மின்கசிவால் சிறிய அளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. எஸ்பிஜி வளாகத்தில் ஏற்பட்ட தீ உடனடியாக அணைக்கப்பட்டதாக பிரதமர் அலுவலகம் தகவல் அளித்துள்ளது.

Related Stories: